ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:– பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Posts
Showing posts from July 31, 2014
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார் - தினகரன் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- Get link
- X
- Other Apps
'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'-Dinamalar சென்னை : ''நடப்பாண்டில், 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின், 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 19.43 கோடி ரூபாய் செலவாகும். 19 மாவட்டங்களில் உள்ள, 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா, மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதற்கு, ஆண்டுக்கு, 9.28 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆச...