Posts

Showing posts from July 26, 2014
வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம் தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.  இதற்கிடையில் இந்த தேர்வில், இட ஒதுக்கீடு தகுதியுடையவர்களுக்கு மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்ததின் பேரில், தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டது.  அதன்படி 2013ல் நடந்த தகுதி தேர்வில் கூடுதலான ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பும் நடத்தி முடித்து, பட்டதாரி ஆசிரியர்களில் பணி நியமனத்துக்கு தகுதியான நபர்களின் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஆகியவற்றில் பட்டதாரிகள் பலர் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை தா.வாசுதேவன்.மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் அளித்துள்ள செய்தி... வாசுதேவன் ஆசிரியர் பயிற்றுநர் விழுப்புரம் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம்.  ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது. மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம