3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் தகவல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். கவன ஈர்ப்பு சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:- ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்கு...
Posts
Showing posts from July 24, 2014