தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அது குறித்து அவர் கூறியதாவது:– ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இது 0.34 சதவீதமாகும். தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர். அது 2.99 சதவீதம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில்...
Posts
Showing posts from July 23, 2014
- Get link
- X
- Other Apps
FLASH NEWS TNTET : சட்டப்பேரவையில் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தற்போது (23.7.2014)தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள் ஆசிரியர் நியமணம் பற்றி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வினா எழுப்பினார்... இதற்க்கு பதில் அளித்த அமைச்சர் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களில் பணிநியமணம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தகவல்
- Get link
- X
- Other Apps
விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க "TRB"தீவிரம்..! போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது. அதிக வேலை பளு: டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும், அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தற்போது அமலில் உள்ளது. இந்த முறை, டி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும், லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது. இணையதளம்: இந்நிலையை மாற்றி, எளிமையான முறையில், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, தற்போது, டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணைய தளம் வழியாக, விண்ணப்பதாரர், எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால், கட்டணமும், வெகுவாக கு...