Posts

Showing posts from July 21, 2014
அவை விதி எண் 110 ன் கீழ் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அவை விதி எண் 110ன் கீழ் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது Thanks to www.tntam.in 
தேர்வெழுதிய நாளே வந்துவிட்டது: தேர்வு பட்டியலுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதி ஒராண்டாகியும் இதுவரை இறுதி தேர்வு பட்டியலே வெளியிடாமல் இருப்பது வேதனையிலும் வேதனை...  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வரலாறு 09.05.2013 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான‌ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 31.05.2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 31ம் தேதி விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.  14.06.2013 முதுகலை ஆசிரியர் பணியிட எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.07.2013 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 1.67 லட்சம் பேர், விண்ணப்பித்தனர்.  21.07.2013 முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில் நடந்தது. 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.  29.07.2013 முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் ...
TNTET: "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது. இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்க...