Posts

Showing posts from July 20, 2014
கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை. "அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மாணவர்களிடையே கம்ப்யூட்டர் கல்வியில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு துவக்கப்பட்டது. இதற்காக கம்ப்யூட்டர் லேப் அமைக்கப்பட்டு எல்காட் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.அனைத்து பள்ளிகளிலும் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்ட பின் சிறப்பு தேர்வு வைத்து ஏற்கனவே தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இதில் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெறாமல், விலக்கு அளித்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.இதனால் பாதிக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லா
பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள். *2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை. *TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும். * மன்ற கோரிக்கையை, இந்த அவையில் நானும் மற்ற எதிர்க்கட்சிகளும் எடுத்துரைத்ததை ஏற்று, அந்தச் சலுகை வழங்கப்ட்டது. ஆனால் 2013 லிருந்துதான் அந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு 2012 ல் அந்தத் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகமான மதிப்பெண் பெற்றிருக்கின்றார்கள். இந்தச் சலுகை இல்லாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வரக்கூடிய நிலை இல்லை. எனவே 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அந்தச் சலுகை வழங்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். *சிபிஎஸ்இ தரத்திற்கு தமிழக பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். *தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.பள்ளிகளாக வேகமாக மாறி வரக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கின்றோம். சென்ற ஆண்டு மட்டும் 499 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தமிழ்
இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வு: 1.40 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்துகிறது. அதன்படி தமிழகத்தில் துணை கலெக்டர்(காலி பணியிடம் 3), காவல்துறை துணை கண்காணிப்பாளர்(33), வணிகவரித்துறை இணை கமிஷனர்(33), ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர்(10) ஆகிய பதவிகளில் 79 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 1.40 லட்சம் பேர் எழுதுகின்றனர். எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மையங்கள் என 560 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர், பறக்கும் படை அதிகாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வு மையங்களை ஆய்வு செய்ய துணை கலெ