Posts

Showing posts from July 19, 2014
தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாகவில்லை என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர் கே.பாலபாரதி வலியுறுத்தினார். வியாழனன்று பேரவையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கைள் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர் இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வில் 38ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 10ஆயிரம் பேரைத்தான் அரசுதேர்வு செய்ய உள்ளது. அவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு பிளஸ்டு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி படிப்பு, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பு, தனியார் பள்ளியில் பணி புரிந்திருந்தால் அந்த அனுபவம், ராணுவ வீரர்களின் வாரிசுகள், உடல் ஊனமுற்றோர் என்ற சமூக பார்வையில் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். இப்படி செய்தால்தான் அது உண்மைய...
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்  ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பணிநிறைவு செய்த தலைமை ஆசிரியர் கோ.சர்வரட்சகனுக்கு பாராட்டு விழா அதன் ஒன்றியத் தலைவர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.  ஆசிரியர் தகுதித் தேர்வினால் கல்வித் தரம் உயராது. எனவே, படித்த இளைஞர்கள் முறையாக அரசு வேலைக்கு செல்ல ஏதுவாக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டிஇடி) ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் கலந்தாய்வு, இடமாறுதல்களை நேர்மையான வகையில் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தர நிர்ணய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன், பொதுச்செயலர் க.மீனாட்சி சுந்தரம், ஒன்றியச் செயலர் ஆ.திருநாவுக்கரசு, பொருளர் க.கவியரசன், துணைச் ச...