புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை- முதல்வர் வழங்குகிறார்!!! சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்று குறிப்பிட்டார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, “கடந்த 3 ஆண்டுகளில் 760 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 300 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளால் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது” என்றார். அவர் மேலும் கூறுகையில், “2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 71,708 ஆசிரியர் களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 53,288 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.எஞ்சிய புதிய ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிநியமன ஆணை வழங்குவார்” என்று தெரிவித்தார்.
Posts
Showing posts from July 18, 2014
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் புதிதாக 3,459 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் அறிவிப்பு - தி இந்து அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 3,459 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.62,583 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. எனவே, தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் பள்ளிக்கல்வித் துறை தனது இலக்கை முன்கூட்டியே எட்டிவிடும். மாணவர்களின் நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2014-15) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 74,177 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு 100 ...
- Get link
- X
- Other Apps
TNTET தேர்வாளர்கள் எதிர் நோக்க வேண்டியவை இனி வரும் இளங்கலை பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. இனி வரும் கல்வியியல் பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக PRACTICAL மதிப்பெண் அதிகமாக இருக்கும். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. தொலை தூர கல்வி மூலம் முடிப்பவர்கள் கூட தங்கள் மதிப்பெண்ணை அதிகம் பெற வழிகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே முடித்தவர்களுக்கு ஒரே வழி(வலி) தான் உள்ளது. அது டெட் மதிப்பெண்ணை உயர்த்துவது. எனவே இறுதி பட்டியல் கண்ட பின்னர் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே 140 AND ABOVE மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்லது
- Get link
- X
- Other Apps
எள்ளளவு பயன் உண்டா? 18,000ஆசிரியர்கள்இன்னும்15நாட்களில்நிரப்பப்படும்-பள்ளிக்கல்வி அமைச்சர்கே.சிவீரமணி. 20,000ஆசிரியர்கள்இன்னும்15நாட்களில்நிரப்பப்படும்-தினத்தந்தி போன்றவைபலர்வயிற்றில்பால்வார்த்தசெய்திகள். ஆனால்அடுத்தஇருதினங்களிலேயே 10762 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியாகி பலர் வயிற்றில் புளியைகரைத்தது.இதற்கு விதிவிலக்கு வரலாறும் புவியியலும். மற்றத் துறைகளான தமிழ், கணிதம் மற்றும் அறிவியலின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பெருஞ்சோர்விற்கு ஆளாகினார்கள். தாள்1க்கான காலிப்பணியிட விவரம் இன்னும்வெளியாகததால்அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பயத்துடனும்காத்துக்கொண்டிருக்கின்றனர். தாள்1க்கான காலிப்பணியிட விவரம் வெளியிடுவதில் ஏதோசிக்கல் இருப்பதாக தெரிகிறது. மாநில பதிவு மூப்பு பயன்படுத்தப்படுமா அல்லது TRB அறிவித்தபடி weightage முறையைமையமாகக் கொண்டுபணிநியமனம் செய்யப்படுமா என்பதில் சிக்கல் இருக்கலாம். தாள்1க்கான வழக்கு நிலவரம் குறித்து எதுவும் நம் கவனத்திற்கு வருவதில்லை. எதுவானாலும் விரைவில் தெரியவரும். இன்றைய நாள் கல்வி மானியக் கோரிக்கை ...
- Get link
- X
- Other Apps
3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்-Dinamani இந்த ஆண்டு 3,459 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் 71,708 பணியிடங்களை அனுமதித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, 2014-15 ஆம் கல்வியாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்காக 75 விரிவுரையாளர் பணியிடங்களும், 340 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும். ஆசிரியர் சார்ந்த பணியிடங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 15, விரிவுரையாளர் பணியிடங்கள் 40, இளநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் 20 என மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 152 உதவியாளர் பணியிடங்கள், 188 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 340 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 202 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறன் கொண...