Posts

Showing posts from July 16, 2014
வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் ஆகியவை குறிப்பிட்ட அளவு சேர்க்கப்பட்டு கட் ஆப் மார்க் 100-க்கு கணக்கிடப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் வரலாறு பாடத் தில்தான் காலியிடங்கள் அதிகம் (3,592). எனவே, வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும். அதே போல், ஆங்கில பாடத்தில் 2822 காலியிடங்கள் இருப்பதால் அதற்கும் கட் ஆப் சற்று குறையும். அதேநேரத் தில், தாவரவியல், விலங்கியல் பாடங் களில் காலியிடங்கள் வெறும் 260 (தலா) மட்டுமே உள்ளதால் அவற்றுக்கு கட் ஆப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒவ்வொரு பாடத் திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரிய வில்லை. தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அமைந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுபட்டியல் ஜூலை 30-ம் த...
கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல் சென்னை, ஜூலை16– சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ), ’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:– முதல்– அமைச்சர் ஜெயலலிதா கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க 1093 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டார். ஆனால் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணைகளை பெற்றதால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது. வருகிற 20–ந்தேதி முதல் கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. அடுத்த 1 மாதத்திற்குள் ஆசிரியர்களுக்கான காலி இடங்கள் நிரப்பப்படும். மேலும் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:– தமிழ்நாட்டில் மொத்தம் 501 பாலிடெக்னிக் கல்லூரகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் மாணவ–மாணவிகள்தான் சேர்ந்துள்ளனர். 1 லட்ச...