Posts

Showing posts from July 15, 2014
பேராசிரியர் பணி நேர்காணல்: உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கான நேர்காணல் ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும். உதவி பேராசிரியர் பணி நேர்காணல் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும்.கூடுதல் விவரங்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். 139பேராசிரியர் பணியிடங்கள்: அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.139 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெறும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆக.20- செப்.5 வரை விண்ணப்பம் பெறலாம். trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கூடுதல் விவரம் அறியலாம்
TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
முதுகலை ஆசிரியர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு  முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்று தெரிவித்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய, கடந்த ஆண்டு, ஜூலையில், போட்டி தேர்வு நடந்தது.  தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, ஒரு வாரத்திற்குள், முதுகலை ஆசிரியர், இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.  மொத்தம் உள்ள, 17 பாடங்களில், 6 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், பணி நியமனம் நடந்துள்ளது. 11 பாடங்களுக்கு, இறுதி முடிவு வெளியாகவில்லை. இந்த முடிவு வெளியானதும், 16 பாடங்களுக்கு தேர்வு பெறுவோர், முதுகலை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்.  பள்ளி கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'பதவி உயர்வு கலந்தாய்வு,...
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய மனுதாக்கல் :மனுதாரர்கள் இருவாரங்களில் பதிலளிக்கச சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன  இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனுக்கள் (14.07.2014) நீதியரசர் சுப்பையா அவர்களால் விசாராணை செய்யப்பட்டன.  நீதியரசர் ஆர்.சுப்பையா சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் இருவாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன
நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு  வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் ஆசிரியர் பணி நியமனத்தை முடித்து மீண்டும் தேர்வு நடத்த முடியாமல் இருந்தது.  இப்போது வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11 ஆயிரம் பேர் இறுதி பட்டியல் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதையடுத்து,30ம் தேதி வெளியாகும் இறுதி பட்டியலில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரின் பெயர் வெளியாகும்.  பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடிவுக்கு வந்தன. இதையடுத்து, தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியை, டி.ஆர்.பி., மும்முரமாக செய்து வந்தது.  இணையத்தில் வெளியீடு: இப்பணி முடிந்ததை அடுத்து, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் விவரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.  இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளி கூறியதாவது: பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில், பின்னடைவு பணியிடங்கள் (பேக் லாக் வேகன்சிஸ்) மற்றும் 2012 - 13க்...
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரின் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வெளியீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இவர்களிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் 10 ஆயிரத்து 726 பேர் கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்த மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு மொத்தம் 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.  இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே ...