Posts

Showing posts from July 13, 2014
2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல் ராமநாதபுரம்;'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.ராமநாதபுரத்தில், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:தமிழக வருவாய் துறையில், 2,000 வி.ஏ.ஓ.,க்கள்; 70 துணை கலெக்டர்கள்; வணிக வரித் துறையில், 4,600; தேர்வாணையத்தில், 150; வேலைவாய்ப்பு துறையில், 470; சமூக நலத்துறையில், 970; சத்துணவு திட்டத்தில், 25 ஆயிரம்; ஐ.சி.டி.எஸ்.,சில், 10 ஆயிரம்; கல்வித் துறையில், 5,000; உணவு பொருள் வழங்கல் துறையில், 750; நகராட்சிகளில் 17 ஆயிரம் என, 2.87 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், 2 லட்சம் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களே, அதிகளவில் காலியாக உள்ளன. 2014ல், 1.50 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர்.நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, 67 ஆண்டுகளாக தொடர்கிறது. மூன்று மடங்கு அளவுக்கு ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாறாக, தினக்கூலி, தொகுப்பூதிய ஊழியர்களை கொண்ட...
15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் -தினத் தந்தி ஈரோடு, ஜூலை.13-இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். பரிசளிப்பு விழாஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2013-2014ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் பெற்றமைக்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 234 பேர் சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வீரமணி பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 20 ஆயிரம் ஆசிரியர்கள்முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன்-2023 திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி கல்வித்துறைக்காக ரூ.17...
FLASH NEWS:TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனுக்கள் நாளை(14.07.2014) நீதியரசர் சுப்பையா அவர்களால் விசாராணை செய்யப்பட உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்-Dinamalar கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும், 1 லட்சம் ஆசிரியரில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டி.இ.டி., தேர்வை முடிக்காமல் பணியாற்றுவதால், அவர்களின் வேலை, கேள்விக்குறியாகி உள்ளது.டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி முந்தைய காங்கிரஸ் அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இது தொடர்பான அறிவிப்பை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், 2010, ஆகஸ்ட், 23ல் வெளியிட்டது. அறிவிப்பு வெளியான தேதியின் அடிப்படையில், யார், யார் டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்ற விளக்கத்தை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), கடந்த, 20...