TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள் TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மேலும் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன நீதியரசர் ஆர்.சுப்பையா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன
Posts
Showing posts from July 9, 2014
- Get link
- X
- Other Apps
TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார...
- Get link
- X
- Other Apps
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,? கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கான, சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.இதனால், இந்த கல்வியாண்டு மட்டும் தான், ஓராண்டு கொண்ட பி.எட்., படிப்பு நடைமுறையில் இருக்கும். படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பி.எட்., படிப்பிற்கு, இந்த கல்...