TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் த
Posts
Showing posts from July 8, 2014
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும்! முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது.2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை நடைபெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜனவரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை
- Get link
- X
- Other Apps
குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள், தேர்வில் வெற்றி பெற கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அளித்த ஹால் டிக்கெட் நகல், புகைப்படத்துடன் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து, ஜூலை 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.