Posts

Showing posts from July 7, 2014
முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல் -Dinathanthi அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.  ஆசிரியர்கள் நியமனம்  அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த ஆண்டு 3500 ஆசிரியர் கள் நியமனம் செய்யப்படவுள் ளனர். மேலும் முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப் பட உள்ளார்கள். இந்த பள்ளி யில் தற்போது 14 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
விரைவில் ஆசிரியர் தேர்வுப்பட்டியல்!Dinakaran  தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது.  ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது.   ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்...
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மரக்காணம் அரசு உயர்நிலைப் பள்ளி, கடந்த 1978ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆயிரத்து 640 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 29 ஆசிரியர்கள் உள்ளனர்.  பள்ளியில் 14 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தனியார் தொண்டு நிறுவனம் 14 ஆசிரியர்களை நியமனம் செய்து, மாணவர்களுக்கு பயிற்றுவித்தது.இதன் காரணமாக கடந்தாண்டு தேர்வுக்கு சென்ற மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற்றனர்.  இந்த ஆண்டு தொண்டு நிறுவனம் நியமனம் செய்த 14 ஆசிரியர்களை, திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுத செல்லும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவது, ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டுள்ளது. ...