Posts

Showing posts from July 4, 2014
PG-TRB இல் இயற்பியல்,பொருளியல்,வணிகவியல் பாடப் பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.  இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது. இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள். ஏற்கனவே நேற்று TET challenging key answer சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது.  ஆயினும் அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
TET / PG TRB :Today Court Case இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.  இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி ...
தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது? தொடர் மாற்றங்களால் ஏமாற்றம்-Dinakaran  கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92 பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல் செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர்.தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால் மேலும் 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துள்ளது.  தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட் ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், முந்தைய வெயிட்டேஜ் முறையை ரத்து செய்தும், புதிய முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.   ஆனால், தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் எத்தனை பேர் பணி நிய...