Posts

Showing posts from July 2, 2014
TNTET கல்வித்தகுதிக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களை சீராக வழங்கக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது முழுத்தீர்ப்பு விவரம் IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 17.06.2014 CORAM THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU W.P.No.10362 of 2014 and M.P.Nos.2 & 3 of 2014 J.MAHALAKSHMI ... Petitioner vs. 1 THE PRINCIPAL SECRETARY TO GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT FORT ST. GEORGE CHENNAI-9.  2 THE CHAIRMAN TEACHERS RECRUITMENT BOARD DPI CAMPUS CHENNAI-6.  3 THE DIRECTOR OF SCHOOL EDUCATION DPI CAMPUS CHENNAI-6. ...  Respondents Writ Petition filed under Article 226 of the Constitution of India praying for the issuance of a writ of Certiorarified Mandamus, calling for the records pertaining to G.O.Ms. No.252 issued by the 1st respondent dated 5.10.2012 quash the same in so far as the modalities in effecting weightage of marks as contained in Para No.7 and subsequently direct the 1st respondent to apply the marks obtained i...
TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது TNTET அரசாணை 25 ஐ எதிர்த்து Allan Gradwin தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது முழுத்தீர்ப்பு விவரம் IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 17.06.2014 Coram The Hon'ble Mr. Justice S.NAGAMUTHU W.P.Nos.15446 of 2014 and M.P.Nos.1 to 3 of 2014 D.Allan Gradwin ... Petitioner vs. 1.The Principal Secretary to Government, School Education Department, For St. George, Chennai 600 009. 2.The Chairman, Teachers Recruitment Board, DPI Campus, Chennai 600 006. 3.The Director of School Education, DPI Campus, Chennai 600 006. ...  Respondents Petition filed under Article 226 of the Constitution of India praying to issue a writ of certiorari to call for the records of the first respondent pertaining to GO(Ms)No.25 dated 06.02.2014, issued by the Principal secretary to Government, School Education Department, Fort St. George, Chennai 600 009, the first respondent herein, quas...
TRB TET /PG வழக்குகள் இன்றைய நிலை TRB TET /PG வழக்குகள் இன்று விசாரிக்கப்படவில்லை.  பிற்பகல் நடைபெறவிருந்த விசாரணை நடைபெறாததால். மீண்டும் நாளைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறும் எனத் தெரிகின்றது. இவ்வாரத்துடன் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் விசாரிக்கும் போர்ட்போலியோ முடிவடைகின்றது. அடுத்த வாரம் முதல் நீதிபதிகளுக்கு வேறு வழக்குகள் ஒதுக்கப்படும். அதற்குள் நீதியரசர் நாகமுத்து TRB TET /PG வழக்குகளை விசாரித்து தீர்பளிப்பாரா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
TNTET: challenging key answer தொடர்பான வழக்கு  இன்று நடைபெற இருந்த TNTET தாள்-2 challenging key answer தொடர்பான வழக்கு நீதிபதி நாகமுத்து அவர்கள் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் நீதிபதி திரு நாகமுத்து அவர்கள் அமர்வு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு குறித்து விசாரணை கொண்டிருந்த போது ஏற்பட்ட காலதாமதத்தினால் TET குறித்த வழக்கினை விசாரிக்க முடியவில்லை.   சென்னை நீதிமன்றம் அதனால் TRB குறித்த அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது. நாளை முற்பகல் 12 அளவில் TRB குறித்த வழக்குகள் நடைபெறும் என்றும் அதற்கு தகுந்தாற்போல் வாதி பிரதிவாதிகள் அனைவரும் தயாராக வரும்படியும் அறிவுறுத்தப் பட்டது.
M.Ed: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் ( www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று (02.07.14) விசாரணைக்கு வருகின்றன ! நேற்று டி.இ.டி சார்பான வழக்குகளில் 44 (மொத்தம் 55 ) நிறைவடைந்ததாகவும். எஞ்சிய டி.இ.டி மற்றும் முதுகலை ஆசிரியர் (56 வது வழக்கில் இருந்து தொடக்கம்) வழக்குகளும் இன்று மதியம் விசாரணைக்கு வருகின்றது மேலும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக கீ ஆன்சர் தொடர்பானஅந்தந்த பாட நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களை கொண்டு உடனடியாக தீர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வந்தன
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது. பள்ளித் தேர்வுகள்துறை இணை இயக்குநர் உமா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. முதல்நாளில் 125 பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணி நடைபெற்றது. மீதமுள்ள 117 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.