Posts

Showing posts from June 28, 2014
முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M. SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன். அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு
உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, வேலை பார்த்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண்ணை வழங்காத, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 'அஞ்சல் வழியில் படித்தவர்கள், திறந்த நிலை பல்கலையில், எம்.பில்., படித்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பணி அனுபவம்: உதவி பேராசிரியர் தேர்வுக்கு, பி.எச்டி., முடித்தால், 9 மதிப்பெண்; ஆசிரியர் பணி அனுபவத்திற்கு, 14 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 33 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எதுவும் கிடையாது. சரிபார்ப்பு: இதனடிப்படையில், தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து உள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கு, 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, கடந்த ஆண்டு நவம்பரில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது, 'ரெகுல
நாளை குரூப் 2 தேர்வு: ஏற்பாடுகள் தயார்; 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர் குரூப் 2 போட்டி தேர்வு, நாளை, 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில், 2,846 காலி இடங்களை நிரப்ப, குரூப் 2 போட்டி தேர்வு, நாளை காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் இருப்பதாக, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. இது குறித்து, அந்த வட்டாரம், மேலும் தெரிவித்ததாவது: தேர்வை, 6,32,672 பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும், 1,620 மையங்களில், 2,217 தேர்வு அறைகளில், தேர்வு நடக்கிறது. சென்னையில், 202 மையங்களில், 231 அறைகளில், தேர்வு நடக்கிறது. 71,498 பேர், சென்னையில் தேர்வெழுதுகின்றனர். தேர்வு, 300 மதிப்பெண்ணுக்கு, 'அப்ஜக்டிவ்' முறையில் நடக்கும். 200 கேள்விகளுக்கு, தலா, 1.5 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பணி என்பதால், இரண்டாவது தேர்வு எதுவும் கிடையாது. தேர்வை கண்காணிக்க, 228 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் (ஆர
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம் டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியை, 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான, பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, தலைவர் பதவியை, பாலசுப்ரமணியம் கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.