Posts

Showing posts from June 27, 2014
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார் TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை. மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 1 வாரத்துக்குள் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து புதிய பட்டியல் வெளியிட வேண்டும்:ஆசிரியர் தகுதித் தேர்வில் 33-வது வினாவுக்கு 2 சரியான பதில்களால் பாதிப்பு: மனுதாரர்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே மாதம் நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் நாளை ( 27 06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மீண்டும் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது