ஆங்கில வழிக் கல்வியை திணிக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்! அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளை திணிப்பதைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம், உலகத் தமிழ் கழகத்தின் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் ம.சு. சுதர்சன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழக அரசு முதல்கட்டமாக 2013-14ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளிலும், உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பிரிவுகளைத் தொடங்கியது. இப்போது, இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதேநிலை தொடர்ந்தால் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் அதிகரித்து தமிழ்வழிப் பிரிவுகள் குறையத் தொடங்கும். கடலூர் மாவட்டத்தில் 2013-14ஆம் ஆண்டில் 162 அரசு தொடக்கப் பள
Posts
Showing posts from June 22, 2014
- Get link
- X
- Other Apps
பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு. கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர்காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும் மேற்பட்ட இலவச நலதிட்டங்களை மாணவர்களுக்காக செயல்படுத்தவேண்டிய நிலை உள்ளது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் உதவியாளர்உள்ளிட்ட காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன. மேலும் ஓய்வு பெறுபவர்கள் உள்ளிட்ட புதிதாக உருவாகும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையும்ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன.இதன் காரணமாக மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும்பணிகளை பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் இவ்வாறு பயிற்றுவித்தல் அல்லாத பிற பணிகளை மேற்கொள்வதற்கு நாள்தோறும் அதிக நேரம் ஒதுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பயிற்றுவித்தல் பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்வித்துறை அலுவலகங்கள் ம