குரூப் 2ஏ ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2846 இடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்விற்கு 6 லட்சத்து 25 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Posts
Showing posts from June 19, 2014
- Get link
- X
- Other Apps
ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க கல்வித் துறை பரிசீலனை தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன...
- Get link
- X
- Other Apps
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இதனால் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21-க்கு பதிலாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். ஆசிரியர்களின் பயணத்தைக் குறைக்கும் வகையில் இப்போது பணிபுரியும் மாவட்டத்திலிருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நடைபெ...