Posts

Showing posts from June 16, 2014
ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1 ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையா...
முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை. முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுஎன தேர்வு எழுதும் வழக்கத்தில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டது. புதிய முறைப்படி, நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வுநடத்தப்படுகிறது.ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பிறகு, அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின், தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.முப்பருவ கல்வி முறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் அடுத்தகல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பத்தா...
ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிப்பு :அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர் அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.பொறியியல் கல்லூரிக ளில் உதவி பேராசிரியர் பணியி டங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையாளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து கிறது. இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இப்பணியிடங் களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலை யில் வெளியிட முட...
'ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை': அகில இந்திய ஆசிரியர் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது. இரு துறைகளிலும் சேர்த்து, 3,000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். சென்னை நகரில் இருந்து, 200க்கும் அதிகமான ஆசிரியர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டங்களுக்கோ, தூக்கி அடிக்கப்படலாம். தவிப்பு இந்த ஆண்டு, பணி நிரவல் கலந்தாய்வு நடப்பது குறித்த தகவல், இரு மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது முதல், ஆசிரியர்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது தான், பணி நிரவலுக்கு காரணம் என, கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, அகில இந...