Posts

Showing posts from June 15, 2014
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம். TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள் (20.06.2014)அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்க்கு அனுமதி கேட்டு கமிஷ்னரிடம் அனுமதிக் கடிதம்... (அனுமதி கிடைத்துவிட்டது) source www.kalviseithi.com
ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி. மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர். இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் இரண்டாயிரத்து ஐநுாறு மாணவிகள், 6 முதல் 12 வரை ஆங்கில வழிக் கல்வியில் 600 மாணவிகள் படிக்கின்றனர். மாணவியரின்எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம்பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர். மாணவியர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும் என நம்பி இப்பள்ளியில் சேர்ந்தோம். இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது மாணவியர் சேர்க்கை நடப்பதால், பிறகு மாணவியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.
2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு.. 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார். அவர் 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த நீதியரசர் நாகமுத்து அவர்கள், 2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
600 மாணவர்களுக்கு ஒரே ஒரு தமிழாசிரியர்! அரசு மேல்நிலைப்பள்ளியில் அவலம் அன்னுார் : அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவர்களுக்கு ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. அன்னுார் அமரர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி 65 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 1,750 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 6,7 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது. இங்கு பிளஸ் 1ல் கணிதம் மற்றும் உயிரியல் அடங்கிய முதல் பிரிவு, கணிதம், கணினி அறிவியல் அடங்கிய இரண்டாம் பிரிவு, கலைப்பிரிவு, முழு அறிவியல், வரலாறு, புள்ளியியல் என ஆறு பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 2வில், புள்ளியியல் தவிர்த்து ஐந்து பிரிவுகள் செயல்படுகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 600 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே முதுகலை தமிழாசிரியர் மட்டும் உள்ளார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வில் உள்ள 11 வகுப்புகளிலும் தமிழ் பாடம் உள்ளது. எனவே, ஒரே தமிழாசிரியர் 11 வகுப்புகளுக்கு தலா ஒரு முறை செல்ல மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனால், தமிழ் பாடத்தில் கற்பித்தலும், கற்றலும் பாதிக்கப்பட்டுள்ளது. இ...
வி.ஏ.ஓ., தேர்வில் 2.45 லட்சம் பேர் 'ஆப்சென்ட்!' நேற்று நடந்த வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வில், 2.45 லட்சம் பேர், 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வுக்கு, 10 லட்சம் பேர் பதிவு செய்தபோதும், 7.63 லட்சம் பேர் மட்டுமே, தேர்வை எழுதினர். வருவாய்த் துறையில், 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நேற்று போட்டித் தேர்வை நடத்தியது. இதற்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று, 3,000த்திற்கும் மேற்பட்ட தேர்வு அறைகளில், தேர்வு நடந்தது. சென்னையில், தேர்வெழுதியவர்கள், தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். மாநில அளவில், எந்த பிரச்னையும் இல்லாமல், காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, தேர்வு நடந்து முடிந்தது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கூறியதாவது: தேர்வை, 7.63 லட்சம் பேர் எழுதினர். 2.45 லட்சம் பேர், தேர்வுக்கு வரவில்லை. 'கீஆன்சர்' ஒரு வாரத்திற்குள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவை, விரைந்து வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்.