Posts

Showing posts from June 12, 2014
பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை!  நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வேலைநாட்கள் என்று அறிவித்து, அந்த நாளில் பள்ளிகள் வழக்கம்போல இயங்குவது வழக்கம். ஆனால், சனிக்கிழமைகளில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு நாள் என்று அறிவித்து, பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுக் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தி, புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகவும், இதற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதன் படி பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலமெங்கும் உள்ள பள்ளிகல்வி துறைகளை சேர்ந்தவர்களுக்கு இதுக்குறித்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு  அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.  மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மையங்களில், ஆசிரியபயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உட்பட, 13 மாவட்டங்களில், 393 பேர் உபரியாக உள்ளனர். இவர்களை, பணிநிரவல் மூலம், காலியாக உள்ள, மற்றமாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்ய, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.  தற்போது, சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, தருமபுரி உட்பட, 14 மாவட்டங்களில், 393 பணியிடங்கள் காலியாக உள்ளன. உபரியாக உள்ள ஆசிரிய பயிற்றுனர்கள், அந்தந்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்று, 'ஆன் - லைனில்'விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.