2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் பணி நியமனம் 2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014) நேரில் வேண்டுகோள் விடுத்தனர் ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன 2013 முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம்செய்யப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது வேதனயளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர...
Posts
Showing posts from June 11, 2014
- Get link
- X
- Other Apps
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (10.06 .14) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன்,வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால் அவகாசம் கோரினார்.பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.நீதிபதியும் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையினை மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு? தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கருத்து கேட்டு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. கடந்த கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒன்றியத்தில் ஆங்கில வழி வகுப்பு செயல்படுகிறது. தற்போதுள்ள ஆசிரியர்களே ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளை எடுக்கின்றனர்.ஒன்றியம் வாரியாக ஆங்கில வழி வகுப்புகளை துவங்க கோரி பள்ளிக்கல்வித்துறையை அரசுஅறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மெட்ரிக். பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து, குறைந்த மதிப்பெண், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும்மாணவர்களுக்காக மேல்நிலையிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவக்கலாமா என, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்டவாரியாக முதன்மைக்...