முதுநிலை ஆசிரியர் நியமனம் கால தாமதம் காலி இடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கான ஆசிரி யர் நியமனம் இதுவரை நடை பெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜன வரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையி
Posts
Showing posts from June 8, 2014