Posts

Showing posts from June 6, 2014
புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்- DINAKARAN  டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.  இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், ட...
ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் - The Hindu ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.  தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர் களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது. ஆன்லைனில் தேர்ச்சி சான்றிதழ் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) நெட் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழ்களை ஆன்லைனில்தான் (இ-சர்டி பிகேட்) வழங்கி வருகிறது....
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிப்பு-Dinathanthi  ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது.  இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார். அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால் தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் தகுதி த...