Posts

Showing posts from June 5, 2014
முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்றிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இன்றிலிருந்து முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இன்றைக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் சம்பந்தமான இரு வழக்குகள் இடம்பெற்றுள்ளன. நாளைக்கு கீ ஆன்சர் தொடர்பான வழங்குகள் இடம்பெறுவதாக வழக்குகள் தொடுத்த வட்டாரங்கள் தெரிவித்தன.
15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்.  ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.  ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இதையடுத்து, 15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது.  இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.  கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துவிட்டோம்.  தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத அடிப்படையில் கணக
நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு  நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை.  இந்த முறை குஜராத்தில் கிடையாது. ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, தகவல், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சி பெற்று வர வேண்டும்.  குஜராத்தில் பின்பற்றப்படும் இந்த முறையை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக, மத்தி
ஆசிரியர்களை நியமனம் செய்ய புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் ஒரு மாதத்தில் தேர்வு பட்டியல் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரம்  இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டு அது அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்து வருகிறது.  கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அரசாணைபடி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க முடியும்.  அதன்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பிளஸ்–2 தேர்வு, பட்டப்படிப்பில் எ
ஆசிரியர் நியமனம்: புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிவிப்பு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை தொடர்பாக அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 2 வாரங்களில் இந்த ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்த நிலையில், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டதால் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகி வந்தது. இப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய வெயிட்டேஜ் மதிப்ப