Posts

Showing posts from June 3, 2014
ஓராண்டாக தொடரும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்களின் கல்வி பாதிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. இம்மாவட்டத்தில் 124 அரசு உயர், மேல்நிலை, 2 ஆதிதிராவிடர், 53 அரசு உதவி பெறும் உயர், மேல்நிலை, 48 மெட்ரிக் என, 227 பள்ளிகள் செயல்படுகின்றன. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 470 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 122 இடங்கள் கடந்த கல்வி ஆண்டு முதல் காலியாக உள்ளன. இவற்றில் 73 இடங்களில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.அனுமதிக்கப்பட்ட 1096 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 33 ஆங்கிலம், 87 சமூக அறிவியல் பாட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 1566 முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 232 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் சில இடங்களில் பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்காத ஆசிரியர் பணியிடங்கள், தொடர்ந்து காலியாக உள்ளன. வரும் கல்வியாண்டிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதுடன்,
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு-தி இந்து நாளேடு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, புதிய நியமன முறை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் சிறப்பு ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். இவர்கள் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்கள் எடுப்பார்கள். சிறப்பு ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் சான்றிதழ் அல்லது உயர்நிலை தேர்ச்சியுடன் டி.டி.சி. எனப்படும் தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தடை முன்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்த சிறப்பு ஆசிரியர்கள், பின்னர் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப் படையில் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், அரசு