Posts

Showing posts from May 31, 2014
TNTET-2013: ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள...