Posts

Showing posts from May 27, 2014
அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:அரசு தேர்வுகள் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் ”லேமினேசன்” செய்வதாக தெரியவருகிறது.”லேமினேசன்” செய்யும்பொழுது சான்றிதழ்கள் பழுதடைய நேரிடுகிறது. மேலும் மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி, பெயர் மாற்றம் திருத்தம் செய்ய நேரிடும் போது ”லேமினேசன்” செய்திருந்தால் திருத்தம் செய்வது கடினமாக உள்ளது. வெளிநாடு செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கும்போது லேமினேசனில் இருந்து சான்றிதழை பிரிக்கும் போது சான்றிதழ் சிதைய நேரிடுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் ”லேமினேசன்” செய்ய வேண்டாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
TET மூலமாக 12,000 ஆசிரியர் நியமனம் அறிவித்துவிட்டு - பணி நிரவல் கணக்கிடுவது முரண்பாடானது. இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் தமிழகத்தில் செயல்படும், பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல், தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ, என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது. ஒவ்வொரு ,ஆண்டும் மே இறுதியில் தொடக்க,நடுநிலை,உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன்மாதம் புதிய பள்ளிகளில் பணியல் சேர்வது வழக்கம்.ஆனால், இக்கல்வியாண்டிற்கான கலந்தாய்வு குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில்,அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 2013 செப்., 1ல்,பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையின் படி உபரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இறுதிபட்டியல், தயார்செய்யப்பட்டு,சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1:35 என்ற வி
தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப
பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை -தின மலர் நாளிதழ் பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை : தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம். லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேர பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது. முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்று தான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்
தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு அரசு பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் , 2008 – 09, 2009 – 10 ஆகிய கல்வி ஆண்டுகளில், தரம் உயர்ந்த உயர், மேல் நிலை பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் 790 பேர் நியமிக்கப்பட்டனர் . இவர்களுக்கு, 2013 டிச., வரை பணியை அரசு நீட்டித்திருந்தது. 2014 ஜன., முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. பள்ளி கல்வி இயக்குனர் மூலம், ஏற்கனேவ கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சம்பளம் வழங்க, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்குரிய பணி நீட்டிப்பு, காலதாமதமாவதால், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான சம்பளத்தை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.