Posts

Showing posts from May 23, 2014
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?--- தின மணி கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை(சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.