Posts

Showing posts from May 22, 2014
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரத்தில் வெளியிட ஏற்பாடு, ‘கீ ஆன்சர்’ அடுத்த வாரம் வெளியாகும்- The Hindu  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவை 2 வாரங்களில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பார்வை இல்லாத மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பி.எட். பட்டதாரிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 39 மையங்களில் புதன்கிழமை நடந்தது.  தேர்வுக்கு விண்ணப்பித்த 4,694 பேரில் 4,476 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். இவர்களில் 3,301 பேர் உடல் ஊனமுற்றவர்கள். எஞ்சிய 1,175 பேர் பார்வையற்ற வர்கள். அவர்களின் உதவியா ளர்கள் கேள்வியைப் படித்து சொன்னார்கள். பார்வையற்ற வர்கள் தெரிவிக்கும் பதில்களை உதவியாளர்கள் விடைத்தாளில் குறித்தனர். தேர்வு நேரம் அதிகரிப்பு சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி, என்கேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்த வக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் 488 பேர் தேர்வெழுதினர்.  இந்த மையங்க ளில் ஆசிரியர் ...