தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது. அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.
Posts
Showing posts from May 20, 2014
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை- தினமலர் முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், ...
- Get link
- X
- Other Apps
நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு --தின மலர் மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு, நாளை(மே 21) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற 1,215 பேர், உடல் ஊனமுற்ற 3,477 பேர் என ,4,692 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.