தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார் தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: "16-வது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக திரும்பப்பெறப் படுகின்றன". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from May 19, 2014
- Get link
- X
- Other Apps
தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கிடைக்குமா?முதல்வரின் கருணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்-தி இந்து நாளேடு 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பில், கே.புவனேஸ்வரி, எம்.ஏ.ரஷீதா பேகம், டி.சுதாமணி, எம்.சக்தி, எஸ்.அருண்குமார் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள். இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான
- Get link
- X
- Other Apps
பகுதிநேர ஊழியர்கள் பணி நிரந்தரம் கோர உரிமையில்லை: நீதிமன்றம் பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது. பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. உத்தரவு விவரம்: தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது. பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு