Posts

Showing posts from May 13, 2014
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து,...