TNTET- வேண்டும் பதிவுமூப்பு -தினமலர் டி.இ.டி., தேர்வை எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக, தேர்வர்கள் வழக்கு தொடர்வது, கின்னஸ் சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில், பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு பிரிவை திறந்து, இது தொடர்பாக வரும் தேர்வர்களுக்கு, பதில் சொல்வதற்கென்றே, 100 பேரையாவது நியமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் மட்டும் தான், இத்தேர்வு முறை வகுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 20, 15 ஆண்டுகள் என, பதிந்து, ஓய்வில்லாமல் அலைந்து சென்றவர்களுக்கு, குறைந்தபட்ச, 'போனஸ் மார்க்' போட, தமிழக முதல்வர், கண்டிப்பாக கருணை காட்ட வேண்டும். அண்டை மாநிலங்களில் எல்லாம், பதிவு மூப்பிற்கு, மார்க் போடுகின்றனர்.டி.இ.டி., தேர்வுமுறை வழிவகுத்த குழுவில், ஆசிரியர்களை, அதாவது அனுபவமிக்கவர்களை சேர்த்து, அவர்களின் மேலான ஆலோசனைகளையும் ஏற்று, தேர்வில், பதிவு மூப்பிற்கும் மார்க் பதிவு செய்ய வேண்டும்.
Posts
Showing posts from May 11, 2014
- Get link
- X
- Other Apps
உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை --- தின மலர் நாளேடு "உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதற்கான தகுதிகளாக, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' தேர்ச்சி மற்றும் பி.எச்.டி., பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தால், அப்பணிக் காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வீதம், 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதியான, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்.டி., போன்றவற்றை முடித்துள்ளனர். ஆனால், அவர்களால், உதவிப் பேராசிரியர் பணிக்கு, செல்ல முடியவி...
- Get link
- X
- Other Apps
இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா? -- தின மலர் நாளேடு இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் தான், இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சி இடங்கள், பெரிய அளவிற்கு, "போணி' ஆகுமா என, தெரியவில்லை. மோகம் குறைந்துவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, "காஸ்ட்லி'யான படிப்பாக, ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 3 லட்சம் ரூபாய் வரை, இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, முட்டி மோதினர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம், மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது, மாணவர்...