Posts

Showing posts from May 9, 2014
ஆசிரியர்களே இல்லாமல் செய்யூர் அரசு பள்ளி சாதனை  காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 70 சதவீத மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த ஆண்டு வரை இருபாலர் பள்ளியாக செயல்பட்டது. கடந்த ஆண்டு செய்யூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தனியாக கொண்டுவரப்பட்டது.  இதைத் தொடர்ந்து இப்போது மாணவர்கள், மாணவிகளுக்கு என்று செய்யூரில் தனித்தனியாக அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மொத்தம் 181 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 50 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பு என்ற பெயரை பெற்றது.  இந்த நிலையில் கடந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கென் தனிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால், கடந்த கல்வி ஆண்டில் இப்பள்ளியில் 75 மாணவர்கள் படித்தனர். அதே நேரம் ஆங்கிலம், கணக்கு, வேதியல், இயற்பியல், உயிரியல், வரலாறு, பொருளாதரவியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களே...