டி.இ.டி., – 2 ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்-Dinamalar ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்- களுக்கு, சான்றிதழ் சரி பார்க்கும் பணி, மாநிலம் முழு- வதும், நேற்று துவங்கியது. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும் 12ம் தேதி வைர, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்’ மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனேவ, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்வர்களின் சான்றிதழ்கைள மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
Posts
Showing posts from May 7, 2014
- Get link
- X
- Other Apps
TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவினர், 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்தவர்களாவர். இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதமதிப்பெண் சலுகைபடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்படி தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம்பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி, வரும் 12-ம
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்-Dinamalar மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம் நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது. இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ