Posts

Showing posts from May 4, 2014
இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது இரட்டைப்பட்டம் பட்டப்படிப்பு படித்தவர்களின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது .பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு குளறுபடிகள்: கண்டு கொள்ளாத ஊடகங்கள் சோதனைகள் வரலாம்,ஆனால் சோதனைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் என்ன சொல்வது விதி என்பதா? அல்லது TRB செய்யும் சதி எனபதா? tet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கிராப்பில் சோகம் மட்டுமே மேலே ஏறி ஏறி இறங்குகிறது.சில நாள் முன்பு வரை தனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு நீதிமன்றம் அறிமுகப் படுத்தியுள்ள புதிய weighatage முறையில் மதிப்பெண் வெகுவாக குறைந்துள்ளதால் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.  TRB&TN GOVT.  தனியார் நிறுவனங்கள் முதல் மத்திய(upsc),மாநில (tnpsc) வேலைவாய்ப்பு திட்ட குழு யாவும் குறிப்பிட்ட பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் முன் இத்தனை காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கான தகுதி இது,தேர்வு முறை இப்படி இருக்கும் என தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால் TET விஷயத்தில் trb இதுவரை காலிபனியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு செய்யப்படும் முறை(weightage method) என எதையும் இதுவரை அதிகாரப் பூர்வமாகா வெளியிடவில்லை.  மாறாக மாற்றங்களையும் குழப்பங்களையுமே மட்டுமே ஏற்படுத்தி உள்ளது.கல்வி துறைக்கென தனியாக அமைச்சகம...
பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு ' பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது.  இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில்மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.  ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு என...