ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும். யுபிஎ...
Posts
Showing posts from May 3, 2014
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் வதைப்படும் டி.இ.டி., தேர்வு நடந்த குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?-Dinamalar பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது. மத்திய அரசு, 2009ல், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்த போது, அதில், ஆசிரியர் தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கல்வி முதல், இடைநிலைக்கல்வி வரை, தரமான கல்வி வழங்க வேண்டும் எனில், தரமான ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என கருதி, டி.இ.டி., தேர்வை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆரம்பக்கல்வி வகுப்புகளை எடுக்கும் இடைநிலை ஆசிரியரும், 10ம் வகுப்பு வரை, வகுப்புகளை எடுக்கும் பட்டதாரி ஆசிரியரும், டி.இ.டி., தேர்வை எதிர்கொள்கின்றனர்.இந்த தேர்வு, பிற மாநிலங்களில் எந்த பிரச்னையும், குளறுபடியும் இல்லாமல் சுமுகமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் மட்டும், தொடர்ந்து குளறுபடியும், குழப்பங்களுமாக இருக்கிறது. கடந்த, 2012ல் நடத்திய முதல்...