டி.இ.டி., தேர்வில், அனைத்து வழக்குகளும் முடிந்தன: இனி எல்லாமே கல்வித்துறை கையில்...-Dinamalar ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி, அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய வேண்டும். டி.இ.டி., தேர்வில், கேள்வி மற்றும் பதில்கள் தொடர்பாகவும், தேர்வு முறைக்கு கடைபிடிக்கப்படும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் காரணமாக, டி.இ.டி., தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தையும், நேற்று முன்தினம், நீதிபதி, நாகமுத்து முடித்து வைத்தார். டி.இ.டி., தேர்வு மதிப்பெண், 60க்கும், தேர்வரின் பிற கல்வி தகுதிகளுக்கு, 40 மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' அடிப்படையில் வழங்கப்படுகிறது. ' இந்த முறை அறிவியல் பூர்வமானது அல
Posts
Showing posts from May 2, 2014