Posts

Showing posts from April 28, 2014
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது. 5 சதவீத மதிப்பெண் சலுகை ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப...