பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் சில வி...
Posts
Showing posts from April 24, 2014
- Get link
- X
- Other Apps
கண்டிப்பா ஓட்டு போடுங்க ஜனநாயக கடமைக்கு இன்று உன்னதமான நாள். கண்டிப்பாக ஓட்டு போடும் பொறுப்பை நிறைவேற்றுங்கள். இதற்காக ஒரு சிறிய கைடு: * உங்கள் வாக்காளர் அட்டையை தயார்படுத்துங்கள். வீட்டுக்கு பூத் ஸ்லிப் கொடுத்திருந்தால் அதில் எந்த பூத் என்று தெரிந்திருக்கும். * இல்லாவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைனில் எளிதில் பார்த்து விடலாம். சரி, ஓட்டுச்சாவடிக்கு கிளம்பலாம் நீங்கள் இனி. * வாக்குசாவடிக்குள் நுழைந்தால், அங்கு உங்கள் எண் உள்ள பூத் முன் வரிசையில் நிற்க வேண்டும். வரிசை நெருங்கும்போது, பெரிய போர்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் எல்லாம் பொறிக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து கொள்ளலாம். * பூத்துக்குள் நுழைந்ததும், முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் தேர்தல் அதிகாரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லிப் இரண்டையும் வாங்கி பார்ப்பார். * உங்கள் பெயர், வாக்காளர் எண், முகவரியை உரக்க படிப்பார். அருகே வரிசையாக உட்கார்ந்திருக்கும் கட்சிகள் சார்ந்த ஏஜென்ட்கள் அதை தங்களிடம் இருக்கும் பதிவேட்டில் உறுதி செய்து கொள்வர். * பெயரில் குழப்பம், மு...