ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் தீர்ப்பு ஒத்திவைப்பு இன்று அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள் .இரு வழக்குகளிலும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மனுதாரர் தரப்பில் எழுத்துவடிவிலான வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.இன்றுடன் விசரணையை முடித்துக்கொண்ட நீதிபதி தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கினை ஒத்திவைத்தார். தீர்ப்பு விரைவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Posts
Showing posts from April 23, 2014
- Get link
- X
- Other Apps
சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (23.04.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை ( 23.04.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன. பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு. 2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணியநேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்புமிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது . அந்த மனுவில் கூறியுள்ளதாவது. 1) 01.01.2012 முதல் தங்களுக்குறிய Seniority -ஐ வழங்க வேண்டும் 2) 01.01.2012 Panel-லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் (மூன்று வருட பட்டபடிப்பு) நிலையிறக்கம் செய்ய வேண்டும் 3) 01.01.2013 Panel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை Panel-ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும். அதுவரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது. எனவே 01.01.2012-Panel-ன் மூலம் பதவியுயர்வு பெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம்) நிலை உருவாகி உள்ளது. 01.01.2013 Panel மற்றும் 01.01.2014 Panel-இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்