Posts

Showing posts from April 22, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் இன்று வெயிட்டேஜ் சம்மந்தமான வழக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு 2012. 5 சதவீத வழக்கு விசாரணை நடைபெற்றது.  வழக்கு விசாரணை நாளைக்கு (23.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும்,இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான -நெட்-தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒவ்வொரு ஆண்டும்இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள்மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்பணிக்கு விண்ணப்பித்து சேர முடியும்.  2014 ஜூன் மாதத்துக்கான தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.29-6-2014 அன்று இந்தத் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு, www.ugcnetonline.in, www.ugc.ac.inஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.  முக்கியத் தேதிகள்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவும்,வங்கி சலானை பதிவிறக்கம் செய்யவும் மே 5 ஆம் தேதி கடைசியாகும்.சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கட்டணம் ச...
சென்னை உயர் நீதிமன்றம் அரசு பணிநியமனம் குறித்து அதிரடி தீர்ப்பு 'பட்டப் படிப்பு முடிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம், முதுகலை பட்டம் பெற்றவர்களை, அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்காதது சரியே; ஆனால், நுழைவுத் தேர்வுக்குப் பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள், அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உரிமை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. குரூப் - 2 பணிகளுக்கான அறிவிப்பு, 2008ல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்த பின், சிலருக்கு,தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்கள், 'முறையான கல்வித் தகுதி பெறவில்லை' என, காரணம்கூறப்பட்டது. பட்டப் படிப்பு முடிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம், முதுகலை பட்டம் பெற்றவர்கள்; பிளஸ் 2முடிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, குரூப் - 2 தேர்வு முடிவுகள்,நிறுத்தி வைக்கப்பட்டன.  இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், கே.எம்.விஜயன், வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், அரசு தரப்பில், கூடுதல் அட்...