ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிகளின் சார்பில் தொடக்கக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறையை, பள்ளி கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தியது. ஆங்கில வழிக்கல்வி முறையால், ஏராளமான அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு தற்காலிகமாக பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வின்அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது மேலும் சில பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி முறையை அமல்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. புதிதாக ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் துவக்கப்படவுள்ளபள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட...
Posts
Showing posts from April 20, 2014