சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), , மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது. 'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு,சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்தஅறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து, இலவச பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம் தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்று உள்ளனர். போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்
Posts
Showing posts from April 5, 2014
- Get link
- X
- Other Apps
தேர்ச்சி பெறுவது எளிது; 100க்கு நூறு கடினம்: கணிதம் தேர்வு: மாணவர்கள் கருத்து பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதி கடினமாக அமைந்ததால், கிராமப்புற மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பது கடினம்,' என, மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். * டி.பாபு, வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்: 'தினமலர்' நாளிதழ் நடத்திய, 'ஜெயித்துகாட்டுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆசிரியர் கொடுத்த டிப்ஸ், 100 மார்க் இலக்கை தொடுவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. எளிமையாக இருந்ததால்,தேர்வு முடிய 10 நிமிடங்களுக்கு முன் எழுதி முடித்துவிட்டேன். எதிர்பார்த்த கேள்விகள் வராமல் போனாலும், அனைத்து பகுதிகளையும் முழுமையாக படித்திருந்ததால், 'சென்டம்' எடுக்க வாய்ப்பு உள்ளது, என்றார். * எம்.நஷ்மிரா ஆஸ்மி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஆனால், வழக்கம் போல் ஐந்து மார்க் வினாவில், காரணி படுத்துதல் அல்லது வர்க்கமூலம் ஆகிய பிரிவுகளில் இருந்து ஏதாவது ஒரு வினா, கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த இரண்டு பிரிவுகளில் இ