Posts

Showing posts from April 4, 2014
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு இம்மாத இறுதியில்( ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை ) நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 17 ஆயிரத்து 966 பேருக்கு கடந்த மாதம், தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.  இந்நிலையில், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 24 ஆயிரத்து 561 பேருக்கு ஏப்ரல் 7ம் முதல் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தலாம் என டிஆர்பி ஏற்கனவே முடிவு செய்திருந்தது. வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதாலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்...