Posts

Showing posts from April 2, 2014
நேற்று 01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள் NEWS UPDATE நேற்று 01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் GROUPING MATTERS ~~~~~~~~~~~~~~~~  1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES ~~~~~~~~~~~~~~~~  2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  நேற்று இடம்பெற்றிருந்த மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் அடுத்த வாரம் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம்முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனும...
வி.ஏ.ஓ., தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம். ஜூன், 14ம் தேதி நடக்க உள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு,இணையதளம் வழியாக, இதுவரை, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) வட்டாரம் தெரிவித்தது. கடைசி தேதியான வரும், 15க்குள், மேலும் 5 லட்சத்திற்கும், அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வாணையம் எதிர்பார்க்கிறது.தமிழக வருவாய்த்துறையில், 2,342 வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 17ல், வெளியானது. அன்றிலிருந்து, வரும் 15 வரை, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் போட்டி: இந்த வேலைக்கு, 10ம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், வழக்கம் போல், ஏராளமானோர் போட்டி போட்டு, விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 15 நாளில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என, தேர்வாணைய வட்டாரம் தெரிவித்தது. கடைசி நாளான, வரும் 15க்குள், மேலும், ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், அத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. எனவே, மொத்த விண்ணப்பதார...