Posts

Showing posts from March 29, 2014
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்42 ஆண்டுகளாகப் பதிவுசெய்து வருபவருக்கு இழப்பீடுதமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு-- தி இந்து நாளேடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவுசெய்து வந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத முதியவருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்தஏ.ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். 1964 முதல் 1968-ம் ஆண்டு வரை பூந்தமல்லியில் உள்ள ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக் உதவியாளராகப் பணிபுரிந்தேன். இந்த பணி அனுபவத்தைப் பெற்ற பின் 11.10.1971 அன்று செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரைப் பதிவு செய்து கொண்டேன். அப்போதிலிருந்து தவறாமல் பதிவைப் புதுப்பித்து வருகிறேன். தற்போது வேலைவாய்ப்பு அலுவலகம் திருவள்ளூருக்கு மாற்றப்பட்டுஅங்கு செயல்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 23.11.2011 அன்று எனது பதிவைப் புதுப்பித்தேன்.அப்போது எனது வயது 60-ஐ கடந்துவிட்டது. எனினும் பதிவைப் புத...